science

img

இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட

பெங்களூரு,மே 12- இந்திய தொழில்நுட்பத்தில் முழுவதுமாக தயாரிக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலம்ஜூலை மாதம் விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன மான இஸ்ரோ, 2008 ஆம் ஆண்டு நிலவைஆய்வு செய்வதற்கு சந்திரயான்-1 என்ற விண்கலத்தை அனுப்பியது. இந்த விண்கலம் நடத்திய சோதனையில் நிலவில் தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நிலவில் தரையிறங்கி ஆய்வுசெய்யும் நோக்கில், சந்திரயான்-2 திட்டத்தைசெயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது. சந்திரயான் -2 விண்கலத்தில் உள்ள மூன்று அதிநவீன சாதனங்களிலும் 14 வகையான தொழில்நுட்பக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் இந்தக் கருவிகள் முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் 800 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டதும் 40 முதல் 46 நாட்கள் பயணித்து நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடையும் என்றும் செப்டம்பர் முதல் வாரத்தில் தரையிறங்கும் விண்கலம், ரோவர் மூலம் 14 நாட்கள் நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்யும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அப்போது எடுக்கப்படும் புகைப்படங்கள் அடுத்த 15 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறைக்கு கிடைக்கும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.இருள் சூழ்ந்து காணப்படும் நிலவின் தென்துருவப் பகுதியில் சந்திரயான்- 2 ஐ தரையிறக்கினால், அப்பகுதியில் விண்கலத்தை முதலில் தரையிறக்கிய நாடு என்ற பெருமையை இந்தியா பெறும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.